பணியிலீடுபட்டிருந்த இளைஞன் திடீர்  மரணம்!

Friday, September 23rd, 2016

யாழ். நகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (22) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இணுவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெகபாலன் சதீஸ்குமார் என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக அருகிலிருந்த தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

800

Related posts: