நெல் கொள்வனவுக்கு 4.2 பில் ஒதுக்கீடு!

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக களஞ்சியங்களை தயார் செய்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதும் விவசாயிகள் தமது நெல்லை தனியார் துறைக்கு வழங்கவே கூடுதல் ஆர்வம் காட்டுவதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹரீசன் தெரிவித்துள்ளார்.
இம்முறை போகத்தின்போது நெல் கொள்வனவு செய்ய 4.2 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதோடு 156 களஞ்சியங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது வரை 20 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வாய்மூல விடைக்காக இந்திக அனுருத்த எம். பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்:
இம்முறை அறுவடையின்போது விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்ய தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகள் தனியார் துறைக்கே கூடுதலாக நெல்லை விற்க ஆர்வம் காட்டுகின்றனர். எப்பிரதேசத்திலாவது களஞ்சிய தட்டுப்பாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்வோம் என்றார்.
Related posts:
|
|