நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 18th, 2020

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் விதமாக விசேட சேவைகளை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவையானது தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நீர் தொடர்பில் உதவிகளை பெற 1939 என்ற இலக்கத்திற்கும், இலங்கை மின்சார சபையின் உதவியை பெற 1987 என்ற இலக்கத்திற்கும் லெகோ மின்சார சபையினரின் உதவியை பெற 1910 என்ற இலக்கத்திற்கும் தொடர்பை ஏற்படத்துமாறு குறித்த ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

Related posts: