நீதிமன்றத்தில் சுவிங்கம் சாப்பிட்ட இளைஞனுக்கு 1000 ரூபா அபராதம்!

Saturday, December 1st, 2018

நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது சுவிங்கம் சாப்பிட்ட இளைஞன் ஒருவரை 1000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றத்தை அவமதித்ததுடன் ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து கொண்டமைக்காக திருகோணமலை நீதிமன்ற பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து சுவிங்கம் சாப்பிட்ட இளைஞனுக்கு தண்டம் செலுத்துமாறு கட்டளை பிறப்பித்தார். திருகோணமலை மொரவெவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: