நீதிபதிகள் பதவியேற்பு!

Wednesday, June 20th, 2018

கிளிநொச்சி, ஊர்காவற்றுறை, மல்லாகம் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்றக் கொள்கையின் அடிப்படையில் வடக்கு – கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 9 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இந்த மாற்றம் நேற்று முதல் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாகப் பதவி வகித்த மாணிக்கவாசகர் கணேசராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் நேற்றுப் பதவியேற்றார்.

மன்னார் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றி வந்த ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா மல்லாகம் மாவட்ட நீதிபதியாக நேற்றுப் பதவியேற்றார். மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இதுவரை கடமையாற்றிய அந்தோனிப்பிள்ளை ஜீட்சன், ஊர்காவற்றுறை நீதிபதியாகவும் நீதிவானாகவும் பதவியேற்றார். கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்றார்.

Related posts: