நாயுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் படுகாயம்!

Wednesday, December 14th, 2016

வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், அதில் பயணித்த இருவர் வீதியோர முட்கிளுவை வேலியுடன் வீழ்ந்து படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு வேம்பிராய்ப் பகுதியில் இடம்பெற்றது. இதில் கச்சாய் தெற்கைச் சேர்ந்தவர்களான செல்வநாயகம் நிஜந்தன் (வயது-27), புவனேஸ்வரன் ரஜீவன் (வயது-28) ஆகிய இருவரே படுகாயமடைந்தனர். கச்சாயிலிருந்து மட்டுவில் கனகம்புளியடி ஊடாக மீசாலை புத்தூர் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதுண்டு இருவரும் துர்க்கி வீசப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு ஒருவர் கை முறிந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

201610231740216720_accident-driver-farmer-died-in-sirkali_SECVPF

Related posts: