நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Saturday, July 8th, 2017

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வருடத்தில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருமானம், 357 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் இத்தொகையை ஒப்பிடுகையில் இது மூன்று தசம் 4 சதவீத அதிகரிப்பாகும்.

தேயிலை, வாசனைத் திரவியங்கள், இயந்திரப் பொருட்கள், பெற்றோலிய உற்பத்திகள், கடல் உணவுகள் என்பனவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு, ஆடை ஏற்றுமதி சிறிய அளவில் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது. நாட்டின்  51 சதவீதமான ஏற்றுமதி அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இத்தாலிய நாடுகளுக்கானதாகும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 12 சதவீத அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts: