தொடர் போராட்டம் நிறைவு!

Wednesday, July 26th, 2017

கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 144 பட்டதாரிகளுக்கு பரீட்சை அடிப்படையில் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கமையவே இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த இப்போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து முடித்து வைத்தனர். மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் சுமார் 155 நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: