தொடரும் சீரற்ற வானிலை : டெங்கு நோய் பரவும் அபாயம் என எச்சரிக்கிறது தேசிய நோய் தடுப்பு பணியகம்!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 23 ஆயிரத்து 934 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ளது.
இதனால் பொதுமக்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் வைத்தியர் அருண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில்!
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு
எந்த பிரதேசத்திலும் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க பின்நிற்கமாட்டோம் - இராணுவத் தளபத...
|
|