தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் இராஜினாமா!

Friday, January 6th, 2017

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டு வரும் பேராசிரியர் சிறிஹெட்டிகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை நேற்று அரசியல் அமைப்பு சபையிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் கொண்டதா? இல்லையா? என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.பேராசிரியர் சிறிஹெட்டிகே ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக 3 மாத காலத்திற்கு வெளிநாடு சென்றுள்ளதால் பொலிஸ் ஆணைக்குழுவில் பதில் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.இதேவேளை பேராசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

z_p-04-Cabinet-03_05012017_KAA_CMY

Related posts: