தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை பணி நிறைவு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Monday, December 26th, 2016
அடுத்த வருடத்தின் முதல் காலண்டு பகுதிக்குள் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை அமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சட்டமூலம் ஆக்கப்படவுள்ள சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பில், விசேட நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல், துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம் போன்றவற்றின் நிபுணர்களிடம் இருந்து கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

national-child-protection-authority

Related posts: