தென்னைமரம் முறிந்து முச்சக்கரவண்டி மீது வீழ்ந்ததில் ஒருவர் பலி!- 3 பேர் படுகாயம்!!

Sunday, August 14th, 2016

திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது நேற்று (13) மாலை தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

விநாயகபுரம் 2 ம் பிரிவு கற்புகனார் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிவகுமார் வினோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார.

unnamed-11-1

திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்றுக்கு முச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று மாலை 5 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் சென்று கொண்டிருந்தபோது திடீரேன பலத்த காற்று வீசிநிலையில் தம்பட்டை முருகன் கோவிலுக்கு அருகில் திடீரென வீதிக்கு அருகாமையில் இருந்த தென்னை மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்ததையடுத்து முச்சக்கரண்டி விபத்துக்குள்ளானது. இதில்பயணம் செய்த விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பேரும் பலத்தகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

unnamed-12-1
அதேவேளை ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஏனைய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரில் சிகிச்சை இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts: