துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம்?

ஹவுன்கல்ல மித்தரமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாதாள உறுப்பினர்கள் இடையே இடம்பெற்றுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இடம்பெற்று இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ளது
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது நேற்று மாலை 6.30 மணியளவில் வீடொன்றிற்கு அருகில் நின்று கொண்டிருந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் போது , கடுமையான காயங்களுடன் பலபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
நண்பர் ஒருவரின் வீடொன்றிற்கு வந்திருந்த போது இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.சந்தேகநபர்களை தேடி ஹவுன்கல்ல காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
|
|