துன்னாலை முள்ளி சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடி!

Monday, March 7th, 2016

துன்னாலை தெற்கு முள்ளிச் சந்தியில் பருத்தித்துறை பொலிஸாரால் பொலிஸ் சோதனைச் சாவடியொன்று இன்றுமுதல்(07)   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை – கொடிகாமம் வீதியால் மணல், மரங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து கடத்தல் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்தன. மேலும், இரண்டு பெண்கள் இந்த வீதியால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இந்த வீதி இருந்தமையால், இந்த வீதியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

இதற்கிணங்க, காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பரின் வழிகாட்டலின் கீழ், இந்தச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இந்தச் சோதனைச் சாவடி 24 மணிநேரமும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது..

Related posts:

ஊரடங்கு உத்தரவு நடைமுறை தொடர்பில் மக்களிடையே குழப்பம் – ஊடக அறிக்கையை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரி...
பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியத்த...
இந்திய மக்களவைத் தேர்தல் - பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!