தீவிரவாத அமைப்புகளின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் – அமைச்சர் சரத் வீரசேகர!

தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து தகவல் பெறப்படுவதாகவும் கூறினார்.
பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இந்த வாரம் அல்கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என குற்றச்சாட்டு!
உயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு பயிற்சி செயற்திட்ட உதவியாளர் நியமனம் - அமைச்சரவை அங்கீகாரம்!
பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளது - இறைவரி திணைக்களம்!
|
|