தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டம்!

Tuesday, April 10th, 2018

ஆபத்தான முறை மற்றும் தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13,500  ரூபா தண்டம் விதித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று. கிளிநொச்சி பொலிஸ் பிரிவு மற்றும் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆபத்தான முறை மற்றும் தவறான முறையில் வாகனம் செலுத்திய ஐவர் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதில் கிளிநொச்சி பொலிஸாரினால் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாக இருவர் மன்றில் முற்படுத்தப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் காரணத்தால் தலா 3000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன் சாரதி அனுமதிப்பத்திரமும் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

பளை பொலிசாரினால் தவறான முறையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்பட்டு முற்படுத்தப்பட்ட நபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் காரணத்தால் அவருக்கு 3000 ரூபா தண்டமும் இரு வாரங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் இரு சாரதிகள் தவறான பக்கம் வாகனத்தைச் செலுத்தினார்கள் எனப் பளை பொலிசாரால் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் காரணத்தால் ஒருவருக்கு 1500 ரூபாவும் மற்றையவருக்கு 3000 ரூபாவும் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று.

Related posts: