தவணைப் பணத்ததை கட்டத் தவறியதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிப்பு!

Friday, October 28th, 2016

மாதகல் பகுதியில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களுக்கான மாதாந்த தவணைப் பணத்தை கடற்றொழிலாளர்கள் கட்டத் தவறியதால் ஏனைய கடற்றொழிலாளர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களையோ, மானிய கடன்களையோ வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தவணைப் பணத்தை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாதகல் பகுதி கடற்றொழில் அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2014ஆம் ஆண்டு துயுளுயுஊ நிறுவனத்தால் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 40 படகுகள் மற்றும் இயந்திரங்கள் என்பன 80 பயனாளிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் 2 வருடங்களாகியும் இதுவரை கடற்றொழிலாளர்கள் படகுகளுக்கான காப்புறுதிகளையோ தவணை முறையிலான கட்டுப்பணத்தையோ செலுத்தவில்லை இதனால் ஏனைய தொழிலாளர்களுக்கு எதுவித அபிவிருத்தித் திட்டங்களையும் செய்ய முடியாதுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

IMG_8522

Related posts: