தற்கொலைக்கு முயன்ற குடும்பத் தலைவர் மருத்துவமனையில்!

Wednesday, February 7th, 2018

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பத் தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. குடும்பஸ்தர் மதுபோதையில் தனது மனைவியைத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த குடும்பத் தலைவரை பொலிஸார் கைது செய்து, வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருந்தனர். காவலில் இருந்த குடும்பத்தலைவர் திடீரென மறைத்து வைத்திருந்த பிளேட்டால் தனது கழுத்தைக் கீறியுள்ளார். அதனை அவதானித்த தடுப்பு காவலில் இருந்த ஏனையவர்கள் அபாயக்குரல் எழுப்பினர். அதனையடுத்து அவரை மீட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: