தம்புள்ளையில் விஷ வாயு கசிந்து இருவர் பலி!

Sunday, March 25th, 2018

தம்புள்ளை ௲ மனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் விஷ வாயு கசிந்ததால் அங்கு பணிபுரிந்த 30 வயதான பெண்ணொருவரும், 19 வயதான ஆணொருவரும்உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் மனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மசாலா பொருட்கள் பொதியிடப்படும் தொழிற்சாலையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில் நபரொருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: