தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களை வழங்க இழுத்தடிப்பு!

Tuesday, July 10th, 2018

வவுனியா நகரசபையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களுக்கு உரிய காலப்பகுதியில் வழங்கப்படுவதில்லை என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் மற்றும் நகரசபைக்குட்பட்ட சில விடயங்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கிய போதும் நகர சபையினர் அவற்றுக்குரிய பதில்களை உரிய காலப்பகுதிக்குள் வழங்காது கால இழுத்தடிப்புக்களைச் செய்து வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசாங்கத்தால் பொது மக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்மூலம் விண்ணப்பங்களைப் பெறுகின்றபோது அவ் விண்ணப்பத்தை பெற்று 14 நாட்களுக்குள் அதற்கான பதில் அல்லது பதில் வழங்க முடியுமா? முடியாதா? என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் வவுனியா நகரசபைக்கு விண்ணப்பங்களை வழங்கி 14 நாட்கள் கடந்தும் எந்தவித பதில்களும் பலருக்கும் வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

.

Related posts: