தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!

Saturday, December 11th, 2021

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2016 – 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 12 (1) ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி இரத்நாயக்க ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

5 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜகத் பண்டார லியன ஆராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹிணி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

000

Related posts: