டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயலனி தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் 700 குழுக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீரதெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17,580 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும்வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
மனித உன்னதத்தை நோக்கிய சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி முறைக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு!
மின் உற்பத்தி வலயமாக சம்பூரில் 500 ஏக்கர் நிலம்!
13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக...
|
|