ஜனாதிபதியை நேரில் சந்திக்க விரும்பும் வரலாற்றுச் சிறுவன்!

Friday, October 7th, 2016

எங்கள் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக நான் சித்தி பெற்றுள்ளேன். அத்தோடு  எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வருவதற்கு நான் ஆசைப்படுவதுடன், நாட்டின் ஜனாதிபதியை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகின்றேன் என ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசீல் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 80 வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு மாணவன் சித்தி பெற்றுள்ளார். கடந்த 1936ஆம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இது வரை எவரும் சித்தி பெறவில்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் திலிப்குமார் சனுஜன் என்ற மாணவன் 164 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

இம்மாணவனின் பெற்றோர்களான திலிப்குமார் துர்க்காதேவி  ஆகியோர் கடற்றொழிலை செய்து வருவதுடன் மகனின் கல்வியை முன்னேற்ற பல்வேறு கஸ்டங்களுக்கு முகங்கொடுத்து கல்வி கற்பித்து வந்துள்ளனர்.

நான் மென்மேலும் கல்வி கற்பதற்கோ அல்லது என்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கோ எனது பெற்றோரின் வருமானம் போதாது காணப்படுவதாகவும், எனது மேல் படிப்புக்கு புலம் பெயர் உறவுகள் மற்றும் உதவிக் கரம் நீட்டுவோர் என்னுடைய கல்வி நடவடிக்கைக்கு உதவுமாறு மாணவன் கேட்டுக் கொண்டுள்ளார். இப்பாடசாலையானது அதி கஷ்ட பிரதேச பாடசாலையாக கருதுவதுடன், இக்கிராமத்து மக்கள் அதிகம் மீன் பிடித் தொழிலையே நம்பி வாழ்க்கை நடத்துவதுடன், அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டே பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

இம்மாணவனை கற்பித்த ஆசிரியர் அ.மோகன்ராஜ், மற்றும் அதிபர் தெ.ஜெயப்பிரதீபன், பெற்றோர்கள், மாணவன் தி.சனுஜன், ஏனைய ஆசிரியர்களுக்கும் கல்குடா கல்வி வலயம் சார்பாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிப்பு – வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக...
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் - உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் பு...