சீரற்ற காலநிலை : 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Sunday, May 16th, 2021

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை,புத்தளம், கண்டி குருணாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக, கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரை 11,796 குடும்பங்களை சேர்ந்த 46,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் சீரற்ற காலநிலை காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன. 1,247 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 636 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மழைக்காரணமாக, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: