சீனக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதி!
Monday, July 18th, 2016இலங்கை வருகைதரும் சீன கடற்படை கப்பல்களை எரிபொருள் நிரப்பலுக்காக ஏற்றுக்கொள்ளப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் உரியமுறையின் கீழ், இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையை பொறுத்தவரை, இது சீனா உட்பட்ட நாடுகளின் முதலீடுகளை ஏற்றுக்கொள்ளும் யதார்த்தவாதியாக செயற்படவுள்ளதாக சிங்கப்பூரின் இணையம் ஒன்றுக்கு அரசு அறிவித்துள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் அது சீனாவுடன், இந்தியாவுடன், ஜப்பானுடன் என்று அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் ஏற்றுக்கொள்ளும்.
இதில் எந்த நாட்டுடனும் தமது நாடு வெறுப்பை கொண்டிருக்கவில்லை என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார். சீனாவை பொறுத்தவரை இலங்கையில் விமானத்தளம் மற்றும் துறைமுக நிர்மாணிப்பு பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது. அத்துடன், இயற்கை வாயு மற்றும் சுத்தரிப்பு பணிகளிலும் ஈடுபடவுள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பாவுக்கான வர்த்தகத்தின் பாதை மற்றும் பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்தி இலங்கையை இந்து சமுத்திரத்தின் வர்த்தக மையமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடன் பாதுகாப்பு விடயங்களில் நெருங்கிய உறவைக்கொண்டிருக்கிறது. இது இந்தியா சீனாவுடன் கொண்டிருக்கும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக பிராந்தியத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை, இந்தியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் விசேட நெருக்கத்தை தக்கவைத்துக்கொண்டு சீனா அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகள் உரிய முறைகளின் கீழ் எரிபொருள் நிரப்பலுக்காக இலங்கைக்கு வந்து செல்ல அனுமதியளிக்கப்படும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, ஜப்பான் இந்தியா என்ற ஆசியாவின் பலமிக்க நாடுகள், மேற்கத்தைய நாடுகளுடன் அவை கொண்டிருக்கும் உறவுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை கொண்டிருக்கலாம். எனினும் இவையாவும் போருக்கு வழிவகுக்கும் என்று தாம் நம்பவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|