சிறைச்சாலை தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, December 10th, 2020

சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்காக இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் யாழ்ப்பாணம், கந்தகாடு மற்றும் கல்லெல்ல ஆகிய பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: