சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 100,000 இற்கு குறைந்த நிலையான வைப்பு வட்டி வருமானத்தின் வரி நீக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
Thursday, January 5th, 2023சிரேஷ்ட பிரஜைகளின் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மாதாந்த வங்கி வட்டி வருமானத்தை பிடித்து வைத்திருக்கும் வரியிலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த வரி தொடர்பில், சிரேஷ்ட பிரஜைகள் எதிர்நோக்க நேரும் அசௌகரியங்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே, நிதியமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகள் தமது பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு, அவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வட்டி வருமானம் கிடைத்தால், அது மேற்படி வரி எல்லைக்குள் உட்படும். எனினும் ‘பிடித்து வைத்திருக்கும் வரி 5% வீதத்துடன் ஒரு இலட்சத்தை விட குறைவான மாதாந்த வட்டி வருமானம் பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு, வருமானத்தை தடுத்துவைப்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் தகவல்கள் அறியவந்துள்ளதால் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிவாரணமாக, மாதாந்த வங்கி வட்டி வருமானம் ஒரு இலட்சத்திற்கும் குறைவாகக் காணப்படும் சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானத்தில் பிடித்து வைத்திருக்கும் வரியை வைத்துக் கொள்ளாதிருக்க தாம் தீர்மானிள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|