சாவகச்சேரியில் 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை!

Saturday, August 15th, 2020

யழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தின் உதயசூரியன் கிராமத்தில் 30 பேருக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையில் சுகாதாரத் தொழிலாளர்களாகப் பணி புரியும் 30 பேருக்கே சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் இபவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் தென்மராட்சியில் மொத்தமாக 180 பேருக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் முதற்கட்டமாக நாவற்குழிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அடுத்த வாரம் மட்டுவில் கிராமத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா சமூகப் பரவலைக் கண்காணிக்கும் நோக்கில் சமூகத்தோடு நெருக்கமாகப் பழகுபவர்கள் மற்றும் கல்வி அறிவு வீதம் குறைந்த சமூக மக்களிடையே இப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: