சம்பந்தன் ஒருபோதும் அமிர்தலிங்கமாக முடியாது – ஹெகலிய
Wednesday, July 6th, 2016
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆக முடியாது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள மஹிந்த ராஜபக்ஸ தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தேரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால் இரா.சம்பந்தன் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியதுடன் தேர்தலின் போது மக்களின் பிரதிநிதித்துவத்தை பெறாத இவர்கள் நல்லாட்சி அரசின் கீழ் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளதாகவும் குறிறம் சாட்டியுள்ளார்.
Related posts:
ஜூலை 12 ஆம் திகதியுடன் பொதுமன்னிப்பு காலம் நிறைவு!
வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்!
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!
|
|