சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு – ஆலை உரிமையாளர்களுக்கு நெல் விநியோகிக்க அரசாங்கம் முடிவு!

Friday, December 16th, 2016

சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்கும் பணியை நேற்று முதல் ஆரம்பித்தாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்;.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகளுக்கு மாத்திரமன்றி, பாரிய அளவிலான ஆலைகளுக்கும் நெல் விநியோகிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதன் கீழ் ஒன்றரை லட்சம் மெற்றிக் தொன் நெல் விநியோகிக்கப்படும். இதன் மூலம் தனியார் துறை வசமிருக்கும் அரிசியும் சந்தைக்கு வந்து அரிசியின் விலை குறையக்கூடும் என்றும் திரு.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

9f70bbd1d1610fdd2f2cd900b289291e_XL

Related posts: