சங்கரத்தையில் நேற்றிரவு இருவர் மீது வாள்வெட்டு!

Wednesday, November 9th, 2016

இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர் நடத்திய வாள்வெட்டில் 2 பேர் படுகாயடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை அந்திராணி வாய்க்கால் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. அந்திராணி வாய்க்கால் வீதி வழியாக நேற்றிரவு 8 மணியளவில் 3 இளைஞர்கள் துவிச்சக்கரவண்டியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் முகங்களை கறுப்புத் துணியால் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்திருந்த 4பேர் கைக்கோடாரி போன்ற ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மற்றொரு இளைஞனை உதைத்து விழுத்திய வாள்வெட்டுக் குழுவினர் கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை வீதியால் சென்ற இந்த வாள்வெட்டுக் குழுவானது சங்கரத்தை பகுதியில் வீதியால் செல்பவர்கள் மீது வாளைக்காட்டி அச்சுறுத்திச் சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

 unnamed-61

Related posts:


அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி க...
21 ஆம் திகதிமுதல் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறை - அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொரு...
நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு நாடாளுமன்றம் பூரண ஒத்துழைப்பு வழ...