கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் பொலிஸ் ரோந்து அதிகரிப்பு

Friday, April 1st, 2016

திருட்டு, வழிப்பறி,தெரு ரவுடித்தனம் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் முகமாகக்  கோப்பாய்ப் பொலிஸ் பிரிவின் ஒரு சில பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் பிரதேச செயலர் ம. பிரதீபன் தலைமையில் பிரதேச பாதுகாப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்ற போது சிவில் பாதுகாப்புக் குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பாய் இராச வீதியில் கடந்த காலங்களில் பல வாழைக் குலைகள் திருட்டுப் போயிருந்தன. அத்துடன் மேற்படி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் வழிப்பறி, தெரு ரவுடித்தனம் என்பன அதிகரித்திருப்பதன் காரணமாகக் குறிப்பிட்ட பகுதிகளில் பொலிஸ் ரோந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன அவசியம் எனச் சிவில் பாதுகாப்புக் குழுவினர் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதற்கமையவே தற்போது பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை - வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் - குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க ...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு தொற்றுப் பரவல் தொடந்தும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!