கொவிட் நோயாளர்களை குணப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் கையளிப்பு!

Wednesday, June 23rd, 2021

கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜகத் அபேசிங்கவினால் குறித்த ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் வழங்கப்பட்டன.

செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தினால் இந்த 100 ஒக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பிரதமரின் வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் வாரங்களிலும் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மேலும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் கையளிக்கப்பட்ட ஒக்சிஜன் கருவிகள், அச்சந்தர்ப்பத்திலேயே பிரதமரினால் கொவிட்டினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்துவதற்காக சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கும் நிவாரணமளிப்பதற்கும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் பெரும் பங்கு வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: