கொரோனா பற்றி அறிய செயலி – உலக சுகாதார அமைப்பு!

Friday, March 27th, 2020

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.

அன்ராய்ட் மற்றும் அப்பிள் செயலிகளுக்காக மட்டுமல்லாது கணனி செயலிகளுக்கு அது வெளியிடப்படும். வைரஸ் தொடர்பான அவசர அறிவிப்பு, செய்தி ஆலோசனைகள் மற்றும் வேறு புதுப்பித்தல் தொடர்பான தகவல்கள் இந்த செயலி மூலம் கிடைக்கும்.

உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தனது இணையத்தளம் மற்றும் வட்ஸ் அப் மூலமாக வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்கி வருகிறது.

வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பது மாத்திரம் இந்த புதிய செயலி மூலம் முன்னெடுக்கப்படாது எனவும் வைரசுக்கு எதிராக செயற்படுவதற்காக ஆரோக்கியமாக இருக்க மக்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படும். இதன் முதல் தொகுப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

Related posts: