கொக்கைன் கடத்தல் : இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை!

Sunday, July 24th, 2016

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பெற எண்ணியுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்கா போன்ற நாடுகளின் புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் (22) பேலியகொடை கொள்கலன் தளத்தில், 8 கொள்கலன்களில் இருந்து 301.1 கிலோகிராம்  கொக்கைன், போதைப்பொருள் தடுப்பு பிரிவனரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட கொக்கைன் இதுவரையில் இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய அளவான கொக்கைன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: