கூட்­டு­வ­லை­களை பயன்­ப­டுத்தி மீன்­பி­டிக்க மீண்டும் தடை!

Sunday, July 3rd, 2016

கொக்­கிளாய் கடல் நீரே­ரியில் தடை­செய்­ய­பட்ட கூட்டு வலை­களைப் பயன்­ப­டுத்தி தொழில் செய்வதற்கு வழங்­கப்­பட்ட அனு­ம­தியை எதிர்த்து மீன­வர்கள் போராட்டம் நடத்­தி­ய­மையைத் தொடர்ந்து இத் தொழி­லுக்கு மீண்டும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒரு பகுதி மீன­வரின் கோரிக்­கையைத் தொடர்ந்து கொக்­கிளாய் கடல் நீரே­ரியில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த கூட்டு வலை­களைப் பயன்­ப­டுத்தித் தொழில் செய்­வ­தற்குப் பணிப்­பாளர் நாயகம் அனு­மதி வழங்­கி­யி­ருந்தார்.

பணிப்­பா­ளரின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப் புத் தெரி­வித்த தமிழ் மீன­வர்கள் முல்லை மாவட்ட செயலகத்­திற்கு முன்­பாகப் போரா ட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதைத் தொடர்ந்து அர­சாங்க அதிபர் பணிப்­பாளர் நாய­கத்­துடன் தொடர்பு கொண்டு நிலை­மையை எடுத்து விளக்கி யதை அடுத்து இத் தொழிலுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது

Related posts: