மயிலிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜ கோபுரம் விரைவில் நிர்மாணிப்பு!

Monday, April 16th, 2018

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தேவி ஆலய கன்னகி அம்மன் ஆலயத்திற்கான இராஜ கோபுரம் மற்றும் வசந்த கோபுரம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28 ஆண்டுகளாக படைத்தரப்பினர் வசமிருந்த வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதிகளின் ஒரு தொகுதி நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள பிரத்திப் பெற்ற மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள தேவியாலய கண்ணகி அம்மன் கோவிலும் ஒன்றாகும்.

இக் கோயில் கடந்த பல வருடங்களாக உரிய பராமரிப்பின்றிய நிலையில் சிதிலமடைந்து காணப்படுவதாகவும் இங்கு நாம் மீளக்குடியேற வேண்டுமாயின் இங்குள்ள இக் கோயிலை புனரமைக்க வேண்டியது அவசியம் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே இக் கோயிலுக்கு வசந்த கோபுரம், ராஜ கோபுரம் மற்றும் மணிக்கூட்டு கோபுரம் ஆகியன நிர்மாணிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகத்தினர் எதிர்வரும் 22ஆம் திகதி மூன்று கோபுரங்களுக்குமான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமது காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தாம் அந்த கோயிலைச் சென்று பார்த்த போது கூரைகளின்றி கோயில் சுவரை பாதிப்படையச் செய்யும் வகையில் மரங்கள் வளர்ந்து காணப்பட்டதாகவும் இதனால் இந்த கோயிலை மீளவும் புனரமைப்பு செய்ய வேண்டியதன் அடிப்படையில் தாம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இக் கோயிலுக்குச் சென்ற மக்கள் சித்திரைப் புத்தாண்டு தினமாகிய நேற்றையதினம் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு இருந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது.

இதனிடையே பலாலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள அரோக்கிய மாதா கோயிலில் குருப்பட்டம் வழங்கும் நிகழ்வுக்காக பங்குத் தந்தையின் வேண்டுகோளுக்கு அமைய ஆலயத்திற்கு செல்வதற்கான அனுமதியினை படைத் தரப்பினர் வழங்கியுள்ளாதகுவம் தெரிவிக்கப்புடுகின்றது.

Related posts: