குழந்தைக்குப் பாலூட்டிய இளம் தாய் மீது தாக்குதல்!

Wednesday, December 14th, 2016

குழந்தைக்குப் பால் ஊட்டிக்கொண்டிருந்த 30 வயதுப் பெண்ணை குடும்பத்துடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பக்கத்து வீட்டுக்கார பெண் தாக்கினார் என பாதிப்புக்கு உள்ளான குடும்பப் பெண் சாவகச்சேரி வைத்தியாசலையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு நாவற்குளி ஜயனார் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் அருகேயுள்ள இரு வீட்டுக்காரப் பெண்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றனர். அங்கு வேலையொன்றைக் கவனிக்குமாறு தாக்குதலுக்கு இலக்கான பெண்ணிடம் தாக்குதலை மேற்கொண்ட பெண் கூறியுள்ளார்.

அதற்கு அவர் தனக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது எனக் கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டுக்கு வந்து தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் அத்தமீறி வீட்டினுள் புகுந்து குழந்தைக்குப் பால் ஊட்டிக் கொண்டிருந்தவேளை தன்னைக் கொட்டன்களாலும் கைகளாலும் தாக்கினார் எனவும் பாதிப்புக்கு உள்ளான பெண் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

775333170Untitled-1

Related posts: