குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் – அமைச்சர்  சம்பிக்க!

Sunday, July 9th, 2017

கொழும்பையும் அதனை அண்டிய நகரங்களிலும் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“இதுவரை குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளில் இருந்த குழப்ப நிலைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்றிலிருந்து கழிவகற்றும் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குப்பைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் என்பன பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Related posts: