கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி!

Thursday, July 1st, 2021

பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன்  மற்றும் செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர்வைத்தியர். லோஹித சமரவிக்ரம ஆகியோருக்கிடையிலான நற்புறவு  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது  கிழக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்படுவதற்க்காக கல்வி சுகாதார மற்றும் பொருளாதார விவசாய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் போது அமைச்சரினால்  செக் நாட்டினூடாகவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினூடாகவும்  கிழக்குமாகாணத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய  அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர்; வைத்தியர். லோஹித சமரவிக்ரம அவர்களுக்கு  முன்வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த அபிவிருத்தி யோசனைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: