கிராம அலுவலர்களுக்கும் கிடைக்கும் அரசின் “TAB” யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2017

கிராம அலுவலர்கள் அனைவருக்கும் Tab வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்நாட்டு அமைச்சு அனைத்து கிராம அலுவலர்களுக்கும் Tab வழங்குவதற்கு அனுமதிளித்துள்ளது. இதன்படி விரைவில் டப் வழங்கப்படும் அதன் ஊடாக பொதுமக்களுக்கு விரைவான சேவைகளைக் கிராம அலுவலர்கள் வழங்க வேண்டும் இன்று 30வீதமான சேவைகளை மட்டுமே கிராம அலுவல்கள் வழங்கி வருகின்றனர். மிகுதி 70 வீதமான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படாமல் காணப்படுகின்றன. தகவல் அறியும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து உத்தியோகத்தர்களும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்றார்.

GS

Related posts: