காலநிலையில் மாற்றம்!

Wednesday, May 17th, 2017

இலங்கையின் வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அடுத்து வரும் சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இலங்கையின் தென் மற்றும் மேற்கு பகுதியில் அதிக மழையுடனான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவமழை நிலைமை நாட்டின் ஊடாக பயணிக்கின்றமையே இதற்கான காரணமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலை நாட்டிலும், வடக்கு, தெற்கு பிரதேசங்களில் இடைக்கிடையே பலத்த காற்று வீசும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: