காணாமல் ஆக்கப்பட்டோர்:  கோரிக்கைகளுக்கு புதிய விண்ணப்பம்!

Saturday, November 18th, 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக புதிய விண்ணப்பமொன்றை மாவட்ட செயலகங்கள் ஊடாக விநியோகிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சேகரிக்குமாறும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றரிக்கை மூலம் அறிவிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். இதனூடாக பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான் ஆணைக்குழு என்பனவற்றின் ஊடாக மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

.

Related posts: