கவனிப்பாரற்றுக் கிடந்த பெருந்தொகை திரிபோஷா!

நாடளாவிய ரீதியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நிறை குறைந்த பிள்ளைகளுக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் பெருந்தொகை திரிபோஷ ரயில் பெட்டிகளில் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
25 டொன் நிறையுடைய இவை, சுமார் இரண்டு மாதங்களாக பெருட்களை ஏற்றிச் செல்லும் ரயிலின் பெட்டிகள் இரண்டில் இருந்து வருவதாக, ரயில் நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் இராஜகிரிய திரிபோஷ தயாரிப்பு தொழிற்சாலையால், கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகத்திற்கு வழங்க இவை, கடந்த ஒக்டோபர் மாதம் 3ம் திகதி ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவற்றை ஏற்றிச் சென்ற ரயில் மெதுவாக தனது பயணத்தை தொடங்கி கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒரு வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரிபோஷா தயாரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு அதனை பயன்படுத்தும் விதத்தில் காலாவதி திகதி பொறிக்கப்படும். இது இவ்வாறு இருக்க, கொழும்பில் இருந்து லொரிகளில் இவற்றை அனுப்பினால் பாரிய செலவுகள் ஏற்படும் என்பதால், தூர பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல திரிபோஷாக்கள் ரயில்வே திணைக்களத்திடம் கையளிக்கப்படுகின்றன. எனினும், அவற்றை கொண்டு செல்வதில் ரயில்வே திணைக்களம் அதிகளவு தாமதத்தை ஏற்படுத்துவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டகலை ரயில் நிலையத்தில் திரிபோஷாக்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த ரயில் பெட்டிகள் தொடர்பில் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார். இதன்போதே, குறித்த பொருட்கள் ஏற்றிச் செல்லும் ரயில் பெட்டிகள் ரயில் எஞ்சின் இல்லாமையால் பயணிக்க முடியாது இரண்டு வாரங்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அங்குள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில் இவற்றை உடனடியாக சேர்க்க வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக, கொட்டகலை ரயில் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|