கழிவு மேலாண்மைக்கு ”பசுமை ஊக்குவிப்பு” – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு!

Sunday, February 12th, 2017

தேசிய பாடசாலை அமைப்பில் கழிவு மேலாண்மை மேற்கொள்ளும் முகமாக “பசுமை ஊக்குவிப்பு” என்ற திட்டத்தை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்பொருட்டு ஆரம்ப முன்னுதாரண வேலைத்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கை நாளை மறுதினம் (13) ​ரோயல் கல்லூரியில் நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை டெங்கு போன்ற தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  அத்துடன் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உயர்வாயுவை தயாரித்து தேசிய மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

srilanka-415x260

Related posts: