கல்வி பொதுத்தராதர சாதாரணதரத்தில் இனி ஆறு பாடங்கள்!

Monday, January 8th, 2018

கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக தேசிய கல்வி நிறுவனம் விசேட குழுவொன்றை பரிந்துரைத்துள்ளதுடன், நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண தர பரீட்சையில் தோற்ற வேண்டிய ஏனைய நான்கு பாடங்களுக்கும் விசேட செயல்முறை ஒன்று அந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சாதாரண தர பரீட்சையில் மேற்கொள்ளக் கூடிய திட்ட ரீதியான பரிந்துரைகளை கல்வி அமைச்சிற்கு வழங்கவுள்ளது

Related posts: