கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Saturday, July 8th, 2017

இலங்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்வரும் கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக 10.07.2017 இல் ஆரம்பிக்கவுள்ளன.

இக்கற்கை நெறிகளாவன: காய்ச்சி இணைப்பவர் (வெல்டிங்), மரவேலை தொழில்நுட்பவியலாளர்,  மின்ணியைப்பாளர், உணவு மற்றும் குளிர்பானம் பரிமாறுபவர், அறை ஊழியர், அலுமினியம் பொருத்துநர், ஆட்டோ திருத்துநர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர், நீர்க்குழாய் பொருத்துநர், இக்கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும்.

இக் கற்கை நெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 4ஆம் மாடி, வீரசிங்க மண்டபம், இல.12 கே.கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம் அல்லது சந்தியில் உள்ள காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 10.07.2017 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ்.உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

Related posts: