கரவெட்டியில் மாணவியை கடத்த முயற்சி !

Tuesday, November 1st, 2016

பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை கடத்த முற்பட்டவர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் கடத்தலை கைவிட்டு தலை தெறிக்க ஓடியதுடன், மாணவி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் கரவெட்டி பகுதியில் இடம்பெற்ற இக்கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

பாடசாலை மாணவி ஒருவர் தனது சகோதரனுடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில்வந்த இருவர் அம்மாணவியை விழுத்தி கடத்;த முற்பட்டுள்ளனர். இதனை அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் போக்குவரத்து ஒழுங்கில் ஈடுபட்டிருந்த நெல்லியடி பொலிஸார் ஒருவர் கண்டு அவ்விடத்திற்கு ஓடிச் சென்றுள்ளார். பொலிஸார் ஓடி  வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள் கடத்தல் முயற்சியினை கைவிட்டு தலை தெறிக்க தப்பி ஓடிச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார். காலை வேளையில் பாடசாலை சீருடையில் வந்த மாணவியை கடத்த முற்பட்டமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் புலனாய்வு விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

kidnap

Related posts: