எலும்புக்கூடு முழுமையாகவுள்ளது!- சட்டத்தரணி சீ.ரணகல!

Wednesday, September 28th, 2016

‘லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தினது எலும்புக்கூடு, முழுமையாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம், குறித்த சடலம், பொலித்தீன் உறையொன்றினால் முழுமையாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

இதனாலேயே, சடலத்தைத் தோண்டி எடுக்கும்போது அதன் எலும்புக்கூடு முழுமையாக இருந்தது” என சடலம் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சீ.ரணகல தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த லசந்த விக்கிரமதுங்கவை, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய டாக்டர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கும் இடையே, பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றது. அதனால் தான்.

இது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலையா? அல்லது வெளிநாடொன்றிலிருந்து தருவிக்கப்பட்ட கூரிய ஆயுதமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட மரணமா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

அவ்வாறு, ஆயுதமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாயின், அவ்வாயுதம் தொடர்பில் கண்டறிவது அவசியமாகும். இவ்வாறான காரணங்களுக்காகவே, குறித்த சடலத்தை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

download-63-1

Related posts:

2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் சன்ன...
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - புதிய...
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்பானவை - பொது முகாமையாளர் குலமித்ர பண்டார தெரிவிப்பு!