எறியப்படும் முகக்கவசங்களால் அதிக ஆபத்து – மக்களை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் !

Sunday, April 19th, 2020

கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயன்படுத்திய முகக்கவசங்களை பொது மக்கள் சாதாண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று நிபுணர்கள் அவசர எச்சரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை என கூறுப்படுகின்றது.

எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: